பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் ராணுவ ஒத்துழைப்பு குறித்த 3-வது பணிக்குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
प्रविष्टि तिथि:
19 JUL 2023 5:58PM by PIB Chennai
இராணுவ மற்றும் ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் ராணுவ ஒத்துழைப்புக்கான பணிக்குழுவின் 3 வது கூட்டம் 2023 ஜூலை 18 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையினரின் தலைவரும் ஐ.டி.எஸ் தலைமையகத் தலைமைப் பணியாளர் குழுவின் (சி.ஐ.எஸ்.சி) தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ, ரஷ்ய கூட்டமைப்பு ராணுவ முதன்மை செயல்பாட்டு இயக்குநரகத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டைலெவ்ஸ்கி இகோர் நிக்கோலேவிச் ஆகியோர் இணைத் தலைமை வகித்தனர். இந்த சந்திப்பு நட்பு ரீதியான மற்றும் சுமூகமான சூழலில் நடைபெற்றது.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்துவரும் பாதுகாப்பு ஈடுபாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும், தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்புக் கழக வழிமுறையின் கீழ் புதிய முன்முயற்சிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
தலைமையகங்கள், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்புக்கான முதன்மை இயக்குநரகம் ஆகியவற்றுக்கிடையே தொலைநோக்கு உத்தி மற்றும் செயல்பாட்டு நிலைகளில் வழக்கமான பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு வடிவமே இந்தப் பணிக்குழு கூட்டம்.
----
(Release ID: 1940767)
SM/KRS
(रिलीज़ आईडी: 1940841)
आगंतुक पटल : 168