நிதி அமைச்சகம்

மூன்றாவது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம்

ஜி20 ஆவணம் மற்றும் தலைவரின் சுருக்க உரை

Posted On: 18 JUL 2023 8:42PM by PIB Chennai

ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள், 17-18 ஜூலை 2023 அன்று, இந்தியாவின் காந்திநகரில் சந்தித்தோம். "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற இந்திய தலைமையின் கருப்பொருளின் கீழ், ஜி20 நாடுகளின் மக்கள் மற்றும் உலகின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அனைத்து நாடுகளிலும் சர்வதேச அளவிலான வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கும், உலகை வழிநடத்துவதற்கும், வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரத்துக்கும் உறுதியளிக்கபடுகிறது.

உக்ரைன் போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக பாதிக்கும். என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொதுச் சபை உட்பட மற்ற அமைப்புகளில் வெளிப்படுத்திய ஜி20 நாடுகளின் நிலைப்பாடுகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

 

சர்வதேச சட்டம் மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பலதரப்பு அமைப்பை நிலைநிறுத்துவது அவசியம். அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மோதல்களுக்கு சுமூகமான தீர்வு, நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான அமைதி முயற்சிகள், அத்துடன் தூதரக பேச்சுவார்த்தை ஆகியவை இன்றியமையாதவை ஆகும்.

 

சர்வதேச பொருளாதாரக் கண்ணோட்டம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கான கொள்கைப் பதில்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பட்டது. பருவநிலை நிதிக்காக உரிய நேரத்தில் போதுமான ஆதாரங்கள், பசுமை எரிசக்தி மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பத்திற்கான கொள்கை நடவடிக்கைகள் உட்பட நிலையான நிதி மற்றும் உள்கட்டமைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் உறுப்பினர் நாடுகள் விவாதித்தன.

சர்வதேச அளவில் உணவு மற்றும் எரிபொருள் விலை உச்ச நிலைகளில் இருந்து வீழ்ச்சியடைந்தாலும், உலகப் பொருளாதாரத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, உணவு மற்றும் எரிசக்தி சந்தைகளில் அதிக அளவு ஏற்ற இறக்கத்திற்கான சாத்தியம் உள்ளது. இச்சூழலில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை மற்றும் ச்ரவதேச பொருளாதாரத்திற்கான அவற்றின் தாக்கங்கள் குறித்தும் ஜி20 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச எரிசக்தி நிறுவனம், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அதன் தன்னார்வ மற்றும் கட்டுப்பாடற்ற கொள்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் வளர்ச்சிக்கான தேவைகளை நிவர்த்தி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, 21-ம் நூற்றாண்டின் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள பல்வேறு தரப்புக்கான மேம்பாட்டு வங்கிகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் முயற்சிகளைத் தொடர்வதில் ஜி20 நாடுகள் உறுதியாக இருக்கின்றன.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் முழுமையான மற்றும் பயனுள்ள அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஜி20 நாடுகளின் உறுதியான உறுதிப்பாட்டை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறோம்.

பருவநிலை நிதியை அளிப்பதில் உள்ள முக்கிய சவால்கள், சலுகை நிதியின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு, இடர் நீக்க வசதிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வங்கித் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவையும் இதில் அடங்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து அதனைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆரம்பநிலை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு அதிக மூலதனத்தை செயல்படுத்துவதும் ஒரு சவாலாகவே உள்ளது.

பருவநிலை முதலீடுகள் மற்றும் மாற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கான விருப்பங்களின் பட்டியலை நிலையான நிதி செயற்குழு கூட்டம் உருவாக்கும். பேரிடர் பகிர்வு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள், பசுமை எரிசக்தி மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களில் முதலீட்டில் தனியார் மூலதன பங்களிப்பின் முக்கியத்துவத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.

நிலையான நிதி செயற்குழு கூட்டம் பருவநிலையோடு கூடுதலாக நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு நிதியளிக்கும் பணியை மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும்.

முறைசார் கருவிகள், தனித்த அளவீடு மற்றும் அறிக்கையிடல் கட்டமைப்புகள் இல்லாதது சமூக தாக்க முதலீட்டு வளர்ச்சியைத் தடுக்கிறது. இதேபோல், இயற்கை தொடர்பான தரவு மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட தன்மை, தரவு மற்றும் அளவீடுகளுக்கான அணுகல் ஆகியவை பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன.

நிலையான வளர்ச்சி மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்திற்கான 2030 நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை ஆதரிப்பதில் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நிலையான நிதிக்கான திறன் மேம்பாட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும், வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப உதவி, நிலையான நிதி பற்றாக்குறை மற்றும் திறன்-வளர்ப்பு, திட்டங்களை வழங்குவோருக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமை ஆகிய சிக்கல்கள் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, நிதி நடவடிக்கை பணிக்குழு அதன் பிராந்திய அமைப்புகளுக்கு முன்னுரிமைகளை வழங்குவதன் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களின் அதிகரித்து வரும் தேவைகளை ஆதரிப்பதோடு, அடுத்த சுற்று பரஸ்பர மதிப்பீடுகள் மேற்கொள்வதும் ஊக்குவிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் போதனைகளை நினைவூட்டும் தொலைநோக்குப் பார்வையுடன், ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களாகிய நாங்கள், ஒவ்வொரு தேசமும் செழிக்கும், அவற்றின் வளம் பரவலாகப் பகிரப்பட்டு, மனிதகுலம் மற்றும் உலகின் நல்வாழ்வு ஒன்றுடன் ஒன்று இணைந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம்.

***

LK/AM/Rj

 


(Release ID: 1940794) Visitor Counter : 193


Read this release in: English , Urdu , Hindi , Marathi