அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தூய எரிசக்தித் துறையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் அழைப்பு

Posted On: 19 JUL 2023 2:43PM by PIB Chennai

தூய எரிசக்தி கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற 8-வது “கண்டுபிடிப்புகளுக்கான இயக்கம்” கூட்டத்தில் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மலிவு விலையில் தூய எரிசக்தியை பெறுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டுமெனக் கூறினார். 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர், கோவாவிலிருந்து காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார்.

 

மலிவு விலையில் தூய எரிசக்தியைப் பெற பொதுத்துறை அமைப்புகளும், தனியாரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை எனவும் அவர் கூறினார். கடந்த 2018-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிஇஐஐசி மையம், தூய எரிசக்தி துறையில் பொதுத்துறை அமைப்புகளும், தனியாரும் இணைந்து செயல்படுவது குறித்த, இந்திய அரசின் உறுதிக்கு சான்றாக இருப்பதாகக் கூறினார்.

 

பொதுத்துறை அமைப்புகளும், தனியாரும் இணைந்து செயல்படுவது மற்ற துறைகளில் உள்ள சர்வதேச சவால்களைத் தீர்க்கவும் சமாளிக்கவும் உதவும் என்று கூறி அமைச்சர் தனது உரையை  முடித்தார். புத்தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க அனைவருடன் இணைந்து செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் கூறினார்.

***

LK/CR/RJ


(Release ID: 1940766) Visitor Counter : 169