வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்கள்’, ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகள்’ ஆகியவற்றுக்கு தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை டிபிஐஐடி அறிவித்துள்ளது

Posted On: 19 JUL 2023 2:25PM by PIB Chennai

‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்கள்’, ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகள்’ ஆகியவற்றுக்கு 2 புதிய தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும், தொழில், வர்த்தகத் துறையும்  2023, ஜூலை 14 அன்று அறிவித்துள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாட்டு  ஆணைகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். இந்தத் தரக் கட்டுப்பாட்டு  ஆணைகள் இந்தியாவில் தர நிலைமையை மேம்படுத்துவதுடன் நுகர்வோரின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்.

‘பிசினால் ஒட்டப்பட்டு மெருகேற்றிய செயற்கை மரப்பொருட்களைப்’ பொறுத்தவரை உள்நாட்டுச் சந்தையில் தயாரிக்கப்பட்ட அல்லது இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மின்சாரம், ரசாயனம் மற்றும் பொதுப்பயன்பாட்டுப் பொருட்களுக்கு இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

அதேபோல் ‘வீட்டுப் பயன்பாட்டுக்கான வெப்பம் தாங்கும் குடுவைகள், பாட்டில்கள், பெட்டிகளைப்’ பொறுத்தவரை உள்நாட்டுச் சந்தையில் தயாரிக்கப்பட்ட அல்லது இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட துருவேறாத எஃகினாலான வேக்கும் குடுவைகள்,  பாட்டில்கள் மற்றும் உணவுப் பதப்படுத்தலுக்கான வெப்பம் தாங்கும் பெட்டிகள் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.

இந்த முன்முயற்சிகள் மூலம், இந்தியாவில் நல்ல தரமான உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை மேம்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்வழியாக  “தற்சார்பு இந்தியாவை” உருவாக்கும் பிரதமரின் பார்வையை நிறைவேற்றுகிறது.

****

LK/SMB/RJ


(Release ID: 1940738) Visitor Counter : 180