எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மாற்று எரிசக்தி பணிக்குழுவின் 4-வது கூட்டம் கோவாவில் 2023 ஜூலை 19-20 தேதிகளில் நடைபெறவுள்ளது

Posted On: 18 JUL 2023 2:19PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மாற்று எரிசக்திப் பணிக்குழுவின் 4-வது கூட்டம் கோவாவில் 2023 ஜூலை 19-20 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு மத்திய மின்சாரத்துறை செயலாளர் திரு பவன் அகர்வால் தலைமை தாங்குவார். புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா, சுரங்கங்கள் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு அம்ரித் லால் மீனா ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதங்களில் பங்கேற்பார்கள்.

மாற்று எரிசக்தித் துறையில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் 6 முன்னுரிமைப் பகுதிகளை வரையறுத்துள்ளது.  இவை நீடித்த மற்றும் தூய்மை எரிசக்தி மேம்பாட்டிற்கு உலகளாவிய ஒத்துழைப்பைக் கட்டமைப்பதற்கு பல்வேறு அம்சங்களில் இந்தியா கவனம் செலுத்துவதை பிரதிபலிக்கிறது.

ஏற்கனவே பெங்களூரு, காந்திநகர், மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற மூன்று கூட்டங்களில் தொடர்ச்சியாக கோவா கூட்டம் இருக்கும்.  நியாயமான மற்றும் அனைவரையும் உட்படுத்திய மாற்று எரிசக்திக்கான புதிய அணுகுமுறைகள், கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிவதும் பிரபலப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கும். மேலும் தற்போது விவாதத்தில் உள்ள அமைச்சர்கள் நிலையிலான நகல் அறிக்கை மீதான விவாதம் இந்தக் கூட்டத்திலும் நடைபெறும். மாற்று எரிசக்திப் பணிக்குழுக் கூட்டங்களின் நிறைவாக அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் கோவாவில் ஜூலை 22 அன்று நடைபெறும்.  இந்தக் கூட்டத்தில் ஜி20 மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.  இதற்கு மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமை தாங்குவார்.

தூய்மையான மாற்று எரிசக்திக்கு உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜி20 இந்திய தலைமைத்துவம் உறுதிபூண்டுள்ளது.

***

AP/SMB/RJ/KPG



(Release ID: 1940515) Visitor Counter : 139