தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களை சமர்ப்பிக்கும் தேதியை நீட்டித்து ட்ராய் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
18 JUL 2023 10:00AM by PIB Chennai
“டிஜிட்டல் தொலைத்தொடர்பு துறையில் ஒழுங்குமுறை சோதனையின் வாயிலாக புதிய தொழில்நுட்பங்கள், சேவைகள், பயன்பாட்டு சேவைகள் மற்றும் வர்த்தக மாதிரிகளை ஊக்குவிப்பது” குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜூன் 19, 2023 அன்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான கருத்துக்களை ஜூலை 17 வரை பங்குதாரர்கள் அனுப்பலாம் என்றும், பதில் கருத்துக்களை ஆகஸ்ட் 1 வரை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று கருத்துக்களையும் பதில் கருத்துக்களையும் முறையே ஜூலை 31, 2023 மற்றும் ஆகஸ்ட் 16, 2023 வரை சமர்ப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்துக்களை ட்ராய் ஆலோசகர் திரு சஞ்சீவ் குமார் ஷர்மாவுக்கு மின்னஞ்சல் (advbbpa@trai.gov.in) வாயிலாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
***
AP/BR/KPG
(रिलीज़ आईडी: 1940421)
आगंतुक पटल : 218