பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அர்ஜென்டினா பாதுகாப்புத்துறை அமைச்சர் புதுதில்லி வருகை; இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

Posted On: 17 JUL 2023 5:22PM by PIB Chennai

அர்ஜென்டினா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் என்ரிக் தையானா நான்கு நாள் இந்தியப் பயணமாக  2023 ஜூலை 17-ம் தேதியன்று புதுதில்லி வந்தடைந்தார். இந்தப் பயணத்தின்போதுஇரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜார்ஜ் தையானா மத்திய  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்குடன் 2023 ஜூலை 18-ம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து,  வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துவார்.

இந்த பயணத்தின் போது அர்ஜென்டினா பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் என்ரிக் தையானா பெங்களூரு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

***

(Release ID: 1940224) 

SM/CR/KRS

 


(Release ID: 1940300) Visitor Counter : 133