ஜவுளித்துறை அமைச்சகம்
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா, மகாராஷ்டிராவின் விரைவான வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
16 JUL 2023 5:55PM by PIB Chennai
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) மகாராஷ்டிராவின் அமராவதியில் அமைக்கப்படுவதற்காக அந்த மாநில மக்களுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தரு பியூஷ் கோயல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமராவதியில் இன்று (16-07-2023) பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்கா தொடர்பான விழாவில் உரையாற்றிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்கா, மகாராஷ்டிராவின் விரைவான முன்னேற்றத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் என்று கூறினார்.
சாலை, ரயில், துறைமுகம் மற்றும் விமான நிலைய கட்டமைப்புகள் என அனைத்து போக்குவரத்து வசதிகளுடனும் அமராவதி நன்கு இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த உள்கட்டமைப்பு வசதிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜவுளித் தொழிலை மேலும் வலுப்படுத்தும் என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், மகாராஷ்டிராவின் அமராவதி உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்காக்களை நிறுவுவது, இந்தியாவை உலகளாவிய ஜவுளி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை என்று கூறினார்.
இந்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***
AP/PLM/KRS
(Release ID: 1940017)
Visitor Counter : 195