மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அடுத்த 4-5 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும்: மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
16 JUL 2023 4:43PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், யூனிகார்ன்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை விளக்கினார். ஐதராபாத்தில் நடைபெற்ற JITO இன்குபேஷன் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனின் (ஜேஐஐஎப்) 6வது நிறுவன நாள் & முதலீட்டாளர்கள்/ஸ்டார்ட்அப் மாநாட்டில் அமைச்சர் கலந்து கொண்டார்.
இந்தியா 2014-ல் இருந்து மேற்கொண்டு வரும் வெற்றிப் பயணத்தை எடுத்துரைத்தார். முக்கியமாக தகவல் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதால், அடுத்த 4-5 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் யூனிகார்ன்கள் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சியைக் காணும் என்று அமைச்சர் கலந்துரையாடலின் போது கூறினார்.
“2014 இல், நமது நாட்டின் தொழில்நுட்ப நிலப்பரப்பு தகவல் தொழில்நுட்பத்துடன் மட்டுமே இருந்தது. அப்போதிருந்து, ஆழமான தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு , தரவு பொருளாதாரம், குறைக்கடத்தி வடிவமைப்பு, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கணினி போன்ற பல்வேறு களங்களில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக, ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப வெளியில் மூன்றில் ஒரு பங்காக இருந்த பகுதி இப்போது விரிவடைந்துள்ளது, யூனிகார்ன்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கான அபரிமிதமான வாய்ப்புகளை இது வழங்குகிறது. 108 யூனிகார்ன்களில் இருந்து அடுத்த 4-5 ஆண்டுகளில் 10,000 ஐ எட்டுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இன்று இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்அப்கள் உள்ளன, அது 10 மடங்கு அதிகரிக்கும்” என்று அமைச்சர் கூறினார்.
திறன் மேம்பாட்டை மேம்படுத்த தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளையும் அவர் பாராட்டினார். திறன் இல்லாத மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் எதிர்கொள்ளும் வரலாற்றுச் சவால்களை குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறன் இந்தியா முயற்சியின் மாற்றத்தக்க தாக்கத்தை சுட்டிக்காட்டினார்.
“2014ல் 4 இந்தியர்களில் 3 பேர் திறன் பயிற்சி அற்றவர்களாக இருந்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டம் இதை மாற்றியது. பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறையுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். சமூகம் மற்றும் பெருநிறுவன கூட்டாண்மை என்பது ஸ்டார்ட்அப்களுக்கு மிகவும் முக்கியமான கூறுகளாகும்” என்று அமைச்சர் கூறினார்.
***
AP/PKV/DL
(Release ID: 1939996)
Visitor Counter : 163