பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
இணையவழி தணிக்கை குறித்த நடவடிக்கை அறிக்கைத் தொகுப்பை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் காணொலிக் காட்சி மூலம் வெளியிட்டார்
प्रविष्टि तिथि:
12 JUL 2023 6:59PM by PIB Chennai
இணையவழி தணிக்கை குறித்த நவடிக்கை அறிக்கை தொகுப்பு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் தலைமை வகித்தார். மாநில பஞ்சாயத்து ராஜ் துறைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிதி தணிக்கை இயக்குநரகத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர். இணையவழி தணிக்கை குறித்த நடவடிக்கை அறிக்கை தொகுப்பு வெளியீட்டில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து நிவாகிகளும் பங்கேற்றனர்.
பஞ்சாயத்து தணிக்கைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்க, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2020, ஏப்ரல் 15 அன்று இணையவழி தணிக்கைப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது, இது பஞ்சாயத்து கணக்குகளின் இணையவழி தணிக்கையை செயல்படுத்துகிறது: நிதி மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்துகிறது.
2020–21, 2021–22 ஆகிய கடைசி இரண்டு தணிக்கை காலகட்டங்களில் 200,000 தணிக்கை அறிக்கைகளை உருவாக்கி, மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. மாநிலங்கள் மற்றும் பஞ்சாயத்துகளின் தரப்பில் இது பாராட்டப்பட வேண்டிய சாதனையாகும். இன்றுவரை, 256,795 பஞ்சாயத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 2,103,058 கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 2021-22 தணிக்கைக் காலத்திற்கு 211,278 (தோராயமாக 80%) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தணிக்கை அறிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
********
SM/ SMB /KRS
(रिलीज़ आईडी: 1939068)
आगंतुक पटल : 243