குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஜூலை 13 முதல் 15 வரை பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2023 6:29PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 2023, ஜூலை 13 முதல் 15 வரை பயணம் மேற்கொள்கிறார்.

2023 ஜூலை 13 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய்  இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை  நிறுவனத்தின் 4-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்கவுள்ளார். 

2023, ஜூலை 14 அன்று ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.  அன்று மாலை ஜெய்ப்பூரில் காமன்வெல்த்  நாடாளுமன்ற சங்கத்தின் கீழ் (ராஜஸ்தான் கிளை) ராஜஸ்தான் சட்டப்பேரவை ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளார்.

*****

(Release ID: 1939023) 

SM/IR/RS/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1939037) வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi