பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2023 ஜூன் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் செயல்பாடுகள் குறித்த  14 ஆவது அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது

Posted On: 11 JUL 2023 6:27PM by PIB Chennai

2023 ஜூன் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் செயல்பாடுகள் குறித்த 14 ஆவது அறிக்கையை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பொது குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்கள் தெரிவித்த குறைகளின் வகைகள், தீர்வின் தன்மை ஆகியவற்றின் விரிவான ஆய்வை வழங்குகிறது.

மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் 1,02,348 குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது ஜூன், 2023 -க்கான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மத்திய செயலகத்தில் பொதுமக்கள் குறைகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளது.

2023 ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள குறைகளின் எண்ணிக்கை 57,848 ஆகக் குறைந்துள்ளது. இது மத்திய செயலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் குறைவாகும். 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் சராசரி குறை தீர்க்கும் காலம் 19 நாட்களாகும்.

ஜூன், 2023க்கான மத்திய அமைச்சகங்கள்/துறைகளுக்கான மாதாந்தர பொதுமக்கள் குறைதீர்ப்பு அறிக்கையின்  முக்கிய அம்சங்கள்:

•           2023, ஜூன் மாதத்தில் 1,02,348 குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன. 2023, ஜூன் 30 நிலவரப்படி 57848 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

•           மத்திய செயலகத்தில் 2023, மே மாத இறுதியில் 59472 ஆக இருந்த  நிலுவை மனுக்கள் எண்ணிக்கை 2023, ஜூன் மாத இறுதியில் 57848 ஆகக் குறைந்துள்ளது.

•           2023, ஜூன் 30 நிலவரப்படி, 15 அமைச்சகங்கள்/துறைகளில் 1000க்கும் அதிகமான மனுக்கள் நிலுவையில் உள்ளன.

•           2023, ஜூன் மாதத்தில், 26320 மேல்முறையீடுகளுக்குத் தீர்வுகாணப்பட்டன. 2023, ஜூன் 30 நிலவரப்படி, மத்திய செயலகத்தில் 23884 மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன.

***

TV/SMB/KRS



(Release ID: 1938797) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi , Punjabi