பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பாரத ஸ்டேட் வங்கிக்கான வங்கியாளர்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தை நாளை நடத்துகிறது ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அமைச்சகம்
Posted On:
09 JUL 2023 7:02PM by PIB Chennai
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பல நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஓய்வூதிய விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, பல்வேறு தெளிவான உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய ஓய்வூதிய வழங்கல் அமைப்புகளாக வங்கிகளே உள்ளன. எனவே ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை, வங்கிகளில் ஓய்வூதியம் தொடர்பான பணிகளைக் கையாளும் களப் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது. இதன் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசுக் குழு நாளை (10-07-2023) அன்று ஸ்ரீநகரில் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கான பயிலரங்கை தொடங்கி நடத்துகிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
ஓய்வூதியதாரர்களின் "வாழ்க்கையை எளிதாக்குவதற்கு" மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும். ஓய்வூதிய செயல்முறைகளைக் கையாள்வதில் வங்கி அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகள் குறித்தும் இந்த பயிலரங்கில் விவாதிக்கப்படும்.
பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளுக்கான பயிலரங்கம் 2023 ஜூலை 10 அன்று தொடங்குகிறது. 11-ம் தேதியும் இந்தப் பயிலரங்கம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தின் குளிர்கால மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த பயிலரங்கில் பாரத ஸ்டேட் வங்கியின் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
***
AD/ PLM /KRS
(Release ID: 1938332)
Visitor Counter : 220