வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் உள்ள தயாரிப்புகள் குரோய்யோவின் இ-காமர்ஸ் தளத்தில் இணைப்பு
प्रविष्टि तिथि:
08 JUL 2023 2:12PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ஓடிஓபி ) திட்டம், குரோய்யோ தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மின்னணு வர்த்தக தளமான இதனுடன், ஓடிஓபி தயாரிப்புகள் இணைக்கப்பட்டு குறியிடப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி கடந்த மூன்றாம் தேதியன்று நடைபெற்றது.
இது விற்பனையாளர்கள் வாங்குபவர்களிடமிருந்து தயாரிப்புத் தேவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கும், தங்கள் தயாரிப்புகளை உலக அளவில் சந்தைப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பைக் கொண்டுவருகிறது.
நிகழ்ச்சியில், டிபிஐஐடியின் இயக்குநர் திருமதி சுப்ரியா தேவஸ்தாலி, கைவினைஞர்கள் அதிக வாடிக்கையாளர் தளத்தைத் தட்டிச் செல்வதற்கு இத்தகைய ஈடுபாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொழில் முனைவோரின் படைப்பாற்றலை அரசு ஊக்குவிப்பதாகவும், இத்தகைய ஒத்துழைப்புகள் மூலம் கைவினைஞர்கள் செழிக்க ஒரு சாதகமான சூழலை வளர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவின் தற்போதைய ஜி20 தலைமைத்துவத்துக்கு ஏற்ப, அரசால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஓடிஓபி பட்டியல் வெளியீட்டு விழாவில், ஒவ்வொரு நிறுவனமும் திட்டத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். இது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க உதவும்.
ஓடிஓபி அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை இங்கே அணுகலாம்:
https://www.stylomania.in/pages/odop.
***
SM/SMB/RS/KRS
(रिलीज़ आईडी: 1938211)
आगंतुक पटल : 202