பாதுகாப்பு அமைச்சகம்
மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகள் மற்றும் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
08 JUL 2023 10:02AM by PIB Chennai
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உத்தி ரீதியிலான கூட்டுச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2023 ஜூலை 10 மற்றும் 11-ம் தேதிகளில் மலேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு டத்தோ செரி முகமது ஹசனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இரு அமைச்சர்களும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இரு அமைச்சர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது மலேசியப் பிரதமர் ஒய்.பி.டத்தோ செரி அன்வர் பின் இப்ராஹிமையும் திரு ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவும் மலேசியாவும் பிராந்திய அமைதி மற்றும் வளம் தொடர்பாக அக்கறையுடன் செயல்படுகின்றன. இரு ஜனநாயக நாடுகளும் ஒரு வலுவான மற்றும் பன்முக உறவைக் கொண்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் மலேசியப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கூட்டு செயல்பாட்டு உத்திகளின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் செயல்பட இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
***
AD/PLM/DL
(रिलीज़ आईडी: 1938189)
आगंतुक पटल : 226