பாதுகாப்பு அமைச்சகம்
பிரான்சின் பாரிஸில் பாஸ்டில் தின அணிவகுப்பு
Posted On:
07 JUL 2023 5:41PM by PIB Chennai
பாரிஸில் பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை அணிவகுப்புக் குழு பிரான்ஸ் சென்றடைந்தது. ஜூலை 14 அன்று. நடைபெறவுள்ள அணிவகுப்பில் இந்தக்குழு பங்கேற்கிறது. இந்திய கடற்படைக் குழுவில் நான்கு அதிகாரிகள் மற்றும் 64 மாலுமிகள் உள்ளனர். இந்த குழுவை சிடிஆர் விராட் பாகேல் வழிநடத்துவார். இந்த அதிகாரி ஏவுகணைப் போரில் நிபுணத்துவம் பெற்றவர். வருணா பயிற்சியின் போது பிசிஆர் வார் என்னும் பிரெஞ்சுக் கப்பலில் இவர் பயணம் செய்துள்ளார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்முனை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் சென்னை,இந்தியக் கடற்படையின் பிரதிநிதியாக, வரும் 12 முதல் 16 வரை பிரான்சுக்கு அனுப்பப்படும். கப்பலின் பணியாளர்கள் பிரான்சின் ப்ரெஸ்டில் நடைபெறும் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வார்கள்.
கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களின் கலவையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் இந்தியக் கடற்படையும் ஒன்றாகும். இது சமஸ்கிருதத்தில் உள்ள பொன்மொழியான ‘சாம் நோ வருணா’ (அதாவது சமுத்திரங்களின் அதிபதி நமக்கு அருள் புரியட்டும்) என்பது கிமு 1500 க்கு முந்தைய ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்தியாவின் கப்பல் கட்டும் திறன், இந்திய கடற்படைக்கும், விரைவான நவீனமயமாக்கலுக்கும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. இன்று, நாட்டின் கப்பல் கட்டும் தளங்கள் அனைத்து வகையான கப்பல்களையும் உருவாக்கி வருகின்றன, மேலும் இந்தியா தனது சொந்த விமானம் தாங்கி, நாசகார கப்பல்கள், போர் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி இயக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் உயரடுக்கு நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். ஐஎன்எஸ் சென்னை உள்நாட்டு தொழில்நுட்பத்தின் அதிநவீன சின்னமாக திகழ்கிறது.
இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சி (வருணா) கடற்படையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுப் பயிற்சியாக உருவாகியுள்ளது. இது இந்தியா - பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இந்தப் பயிற்சி 1993 இல் தொடங்கப்பட்டது. 2001 இல் இதற்கு 'வருணா' என்று பெயரிடப்பட்டது. வருணாவின் 21வது பதிப்பு ஜனவரி 23 அன்று அரபிக் கடலில் நடத்தப்பட்டது.
***
SM/PKV/KRS
(Release ID: 1938058)
Visitor Counter : 166