எரிசக்தி அமைச்சகம்
என்டிபிசி குழுமத்தின் மின் உற்பத்தி திறன் 73 ஜிகா வாட்டைத் தாண்டியது
Posted On:
07 JUL 2023 4:09PM by PIB Chennai
இந்தியாவின் முன்னணி மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசியின் மின் உற்பத்தி திறன் 73,024 மெகாவாட்டைத் தொட்டுள்ளது. இதில் என்டிபிசிக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் 57,038 மெகாவாட் மின் திறனும், என்டிபிசியின் துணை நிறுவனங்கள் மூலம் 15,986 மெகாவாட் மின் திறனும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் பார்ஹ் பகுதியில் உள்ள நீர் மின்சார திட்டத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2-வது அலகு தொடங்கப்பட்டதன் மூலம் என்டிபிசி குழுமத்தின் மொத்த உற்பத்தி திறன் 73 ஜிகாவாட்டைத் தாண்டியது.
இதில் 50 என்டிபிசி உற்பத்தி நிலையங்கள் (26 நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி நிலையங்கள், 7 எரிவாயு அடிப்படையிலான உற்பத்தி நிலையங்கள், ஒரு நீர் மின் நிலையம், 16 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான உற்பத்தி நிலையங்கள்) மற்றும் துணை நிறுவனங்களின் 39 உற்பத்தி நிலையங்கள் (9 நிலக்கரி அடிப்படையிலான நிலையங்கள், 4 எரிவாயு அடிப்படையிலான நிலையங்கள், 8 நீர் மின்சக்தி நிலையங்கள் மற்றும் 18 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அடிப்படையிலான நிலையங்கள்) அடங்கும்.
நாட்டிற்கு மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதில் என்டிபிசி கொண்டுள்ள உறுதியை இந்த சாதனை வலுப்படுத்துகிறது. 2032-ம் ஆண்டுக்குள் 60,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய என்டிபிசி நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. என்டிபிசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் பயன்பாட்டு நிறுவனமாகும். இது நாட்டின் மின்சாரத் தேவையில் 1/4 பங்கை வழங்குகிறது.
(Release ID: 1937933)
***
SM/CR/KRS
(Release ID: 1938054)
Visitor Counter : 152