உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
உலக உணவு இந்தியா-2023: வேளாண் - உணவு பதன நிறுவனங்களுடன் இணைந்து புதுதில்லியில் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலுக்குத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளரும் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளரும் கூட்டாகத் தலைமை வகித்தனர்
Posted On:
06 JUL 2023 4:20PM by PIB Chennai
உலக உணவு இந்தியா-2023 தொடர்பாக, வேளாண் - உணவு பதன நிறுவனங்களுடன் இணைந்து முதலீட்டாளர் வட்டமேசை கலந்துரையாடல், நேற்று புதுதில்லியில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. உலக மற்றும் இந்திய உணவு பதன முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 2023, நவம்பர் 3 முதல் 5 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக உணவு இந்தியா-2023ல் பங்கேற்கும் நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள், உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்துடனான ஒத்துழைப்பு வாய்ப்புகள் பற்றி இந்தக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டது.
வட்டமேசையின் போது, இந்திய சந்தையின் மீது நம்பிக்கை மிக்கக் கண்ணோட்டத்தைப் பங்கேற்பு நிறுவனங்கள் வெளிப்படுத்தியதுடன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்தின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட முதன்மையான பிரதமரின் கிசான் சம்படா யோஜனா உட்பட வணிகச் சூழலை மேம்படுத்த இந்திய அரசின் பல்வேறு முயற்சிகளைப் பாராட்டின.
உலக உணவு இந்தியா-2023-ல் பங்குபெறுவதற்கு நிறுவனங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், நிகழ்வுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், சிறப்பாக ஒதுக்கப்படும் அரங்குகள் மூலம் தங்கள் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் தங்கள் விருப்பத்தை உறுதி செய்தன. நிகழ்வின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டிருக்கும் அமர்வுகளுக்கு உணவு பதனத் தொழில்கள் அமைச்சகத்துடன் இணைவதில் பல நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டின.
***
SM/SMB/KRS
(Release ID: 1937856)
Visitor Counter : 161