விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்பிரிக்கா சர்வதேச சிறுதானிய மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

Posted On: 06 JUL 2023 4:02PM by PIB Chennai

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கென்யாவின் வேளாண் மற்றும் கால்நடை வளர்ச்சித்துறை அமைச்சகம் இணைந்து சர்வதேச பயிர் ஆராய்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தியா- ஆப்பிரிக்கா சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த சர்வதேச மாநாடு 2023 ஆகஸ்ட் 30,31-ல் நடைபெறவுள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து  அரசு பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி வியாழன் அன்று கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. இந்தியா- ஆப்பிரிக்கா சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டின் சின்னம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கென்யாவுக்கான இந்திய தூதர் மத்திய அரசின் இணைச்செயலாளர் (பயிர்கள்), கென்ய அரசின் முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் கென்யாவின் வேளாண் துறை அதிகாரிகள், சர்வதேச வேளாண் ஆராய்ச்சி தலைவர்கள், விவசாயிகள், தனியார் துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

***

AP/IR/AG/RJ


(Release ID: 1937771) Visitor Counter : 141