பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கப்பற்படையும் (ஐஎன்) அமெரிக்கக் கப்பற்படையும் (யுஎன்) மேற்கொண்ட சால்வெக்ஸ் எனப்படும் அழிவுக் காப்பு மற்றும் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் பயிற்சி

प्रविष्टि तिथि: 06 JUL 2023 12:47PM by PIB Chennai

இந்தியக் கப்பற்படையும் அமெரிக்கக்  கப்பற்படையும் மேற்கொண்ட அழிவுக் காப்பு மற்றும் வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் (இஒடி) பயிற்சி, சால்வெக்ஸ்  ஜூன் 26  முதல் ஜூலை 06  வரை கொச்சியில் நடத்தப்பட்டது. இந்தப் படைகள் 2005 ஆம் ஆண்டு முதல் கூட்டாக  அழிவுக் காப்பு  மற்றும் இஒடி பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றன.  இதில் இந்தியக் கப்பற்படையின் ஐஎன்எஸ் நிரீக்ஷக், அமெரிக்கக்  கப்பற்படையின் சால்வர் ஆகிய கப்பல்களும் அடங்கும்.

10 நாட்களுக்கும் மேலாக, இரு நாடுகளின் நீச்சல்  குழுக்களும் கடல்சார் மீட்பு பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் நிலத்திலும் கடலிலும் வெடிக்கும் ஆயுதங்களை அழித்தல் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் கூட்டாகப் பயிற்சி பெற்றனர்.

***

AP /SMB/RJ


(रिलीज़ आईडी: 1937761) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu