பாதுகாப்பு அமைச்சகம்
‘ஜூலே (வணக்கம்) லடாக்’ நிகழ்வுடன் லடாக் மக்களை சந்திக்கிறது இந்தியக் கப்பற்படை’
Posted On:
06 JUL 2023 9:32AM by PIB Chennai
லடாக் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பை விரிவுபடுத்துதல் தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான தேசியத் தலைமையின் பார்வையைத் தொடர்ந்து, லடாக் யூனியன் பிரதேசத்துடனான இணைப்பை வலுப்படுத்த பல வகையான மக்கள்தொடர்பு நிகழ்வை இந்தியக் கப்பற்படை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு, ராணுவத்தில் , தேசக்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இந்தப் பகுதியில் கடல்சார் உணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கப்பற்படைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார், ஜூலை 06, 07 ஆகிய தேதிகளில் லே பகுதியில் பல்வேறு மக்கள்தொடர்பு நிகழ்வுகளை முன்னின்று நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் போது, லே மற்றும் லடாக்கின் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (ஓய்வு) டாக்டர் பி.டி. மிஸ்ராவை சந்திக்கும் இந்தியக் கப்பற்படைத் தளபதி, போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார். ஜூலை 06 அன்று சிந்து சமஸ்கிருதி மையத்தில் இந்தியக் கப்பற்படை இசைக்குழுவின் சிறப்பு இசைக்குழு 'சர்கம்' நிகழ்ச்சியில், போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மனைவியர் சங்க தேசியத் தலைவர் திருமதி கலா ஹரி குமாருடன் கப்பற்படைத் தளபதி கலந்து கொள்வார். 'சர்கம்' நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.
ஜூலை 07 அன்று, கப்பற்படை அணிக்கும் லடாக் அணிக்கும் இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஸ்பிடக் கால்பந்து மைதானத்தில் நடைபெறும்.
***
AP/SMB/RJ
(Release ID: 1937709)
Visitor Counter : 171