விவசாயத்துறை அமைச்சகம்

பஞ்சாப், ஹரியானா, உ.பி. மற்றும் தில்லி மாநிலங்களில் பயிர்க்கழிவுகளைக் கையாளவதற்கான பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை அரசு திருத்தியமைத்துள்ளது

Posted On: 01 JUL 2023 1:38PM by PIB Chennai

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பயிர்க்கழிவுகளை சிறப்பாகக் கையாள பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை அரசு திருத்தியமைத்துள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, விவசாயிகளுக்கும், வைக்கோலைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையே இரு தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். பயிர்கழிவுகளை மறு சுழற்சி செய்ய உதவும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க அரசு நிதியுதவி அளிக்கும்.

திட்ட மதிப்பீட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 65% நிதியுதவி வழங்கும். மறுசுழற்சி செய்யப்படும் மூலப்பொருட்களின் முதன்மை நுகர்வோராக செயல்படும் நிறுவனங்கள் 25% நிதியளிக்கும்.

இந்த முயற்சியால் ஏற்படும் நன்மைகள்;

•    மூன்று ஆண்டு காலத்தில், வயல்வெளிகளில் எரிக்கப்பட வேண்டிய 1.5 மில்லியன் மெட்ரிக் டன் பயிர்க்கழிவுகள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•    மரக்கன்றுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு கணிசமாகக் குறையும்.

•    இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல் மின்சாரம், எத்தனால், உயிரி வாயு உற்பத்தி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

•    இதனால் உயிரி எரிபொருள் மற்றும் ஆற்றல் துறைகளில் புதிய முதலீடுகள் ஏற்படும்.

***

PKV/CR/DL



(Release ID: 1936694) Visitor Counter : 129