பாதுகாப்பு அமைச்சகம்
இலகுரக விமானமான தேஜஸ் இந்திய விமானப்படையில் 7 ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது
Posted On:
30 JUN 2023 3:04PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரகப் போர் விமானம் தேஜஸ், 2023 ஜூலை 01 அன்று இந்திய விமானப்படையில் ஏழு வருட சேவையை நிறைவு செய்கிறது. 2003 ஆம் ஆண்டில் தேஜஸ் என இந்த விமானத்திற்கு பெயரிடப்பட்டது. இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னோக்கு ரேடார் சுய பாதுகாப்பு அறை, லேசர் டெசிகினேஷன் பாட் ஆகிய நவீனத்துவத்துடன் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தேஜஸ் விமானத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்திய விமானப்படை பிரிவு 'பறக்கும் டாகர்ஸ்' என்ற எண் 45 ஸ்க்வாட்ரன் ஆகும்.
மலேசியாவில் லிமா-2019, துபாய் ஏர் ஷோ-2021, 2021ல் இலங்கை விமானப்படை ஆண்டு விழா, 2022ல் ஏர் ஷோ மற்றும் 2017 முதல் ஏரோ இந்தியா ஷோ உட்பட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் விமானத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் இந்தியா தனது போர் விமானத் தயாரிப்பு வல்லமையை நிரூபித்துள்ளது.
***
AP/PKV/RR/KRS
(Release ID: 1936415)
Visitor Counter : 220