நிலக்கரி அமைச்சகம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக சுரங்கத்துறை மாநாடு 2023-ல் இந்தியப் பங்களிப்பை நிலக்கரி செயலர் அம்ரித் லால் மீனா தொடங்கி வைத்தார்
Posted On:
28 JUN 2023 3:00PM by PIB Chennai
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக சுரங்கத்துறை மாநாடு 2023-ல் என்எல்சி இந்தியா லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட் மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பங்களிப்பான நிலக்கரி செயலர் அம்ரித் லால் மீனா ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பானது சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறையில் நம் நாட்டின் தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை விளக்கும் விதமாக அமைகிறது.
இந்த மாநாடு ஜூன் 26 முதல் 29 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதன் வாயிலாக உலகளவில் தொழில்துறையைச் சேர்ந்த தலைமைகள், நிபுணர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கருத்துப் பரிமாற்றங்கள், புத்தாக்க நடவடிக்கைகள், சுரங்கத் துறையில் வருங்கால திட்டம் குறித்து தெளிவான பார்வையை பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக அமைகின்றது.
****
AP/GS/RR/KRS
(Release ID: 1935894)
Visitor Counter : 177