சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதுதில்லி எய்ம்ஸ், சண்டிகர்பிஜிஐஎம்இஆர், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் மத்திய அரசின் சுகாதாரத்திட்டப் பயனாளிகளுக்கு தற்போது இலவச சிகிச்சை வசதிகள் கிடைக்கும்

Posted On: 27 JUN 2023 6:52PM by PIB Chennai

புதுதில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு (பணியாற்றுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள்) தற்போது இலவச சிகிச்சை வசதிகள் கிடைக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் தலைமையில் புதுதில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பிரதிநிதிகள் இடையே இன்று கையெழுத்தானது.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகள் குறிப்பாக ஓய்வூதியதாரப் பயனாளிகள் நலனுக்காக புதுதில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக திரு ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.  இதன் மூலம் மத்திய அரசின் சுகாதாரத் திட்டப்பயனாளிகள் இம்மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற முடியும் என்று அவர் கூறினார்.  இந்நடவடிக்கையின் மூலம் மருத்துவமனைகளில் முன்னதாக பணம் செலுத்தி அதன் பிறகு அதனை மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் மூலம் திரும்ப்ப் பெறப்படுவது களையப்பட்டுள்ளதாகவும் இது நேரத்தை மிச்சப்படுத்தி, எழுத்து வேலைகளை குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க மத்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

***

AP/IR/AG/KRS



(Release ID: 1935722) Visitor Counter : 186