மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மீன்நோயைக் கண்டறிவதற்கும் அவற்றை வகைப்படுத்துவதற்குமான செயலியை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அறிமுகம் செய்கிறார்

Posted On: 27 JUN 2023 4:41PM by PIB Chennai

மீன்வளர்ப்புத்துறை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருவதாகவும், 2021-22 நிதியாண்டில் ஏற்றுமதி வாயிலாக தோராயமாக 57 ஆயிரத்து 586 கோடி ரூபாயை இத்துறை ஈட்டியுள்ளது.  இருப்பினும் மீன்வளர்ப்புத்துறையைப் பொறுத்தமட்டில், மீன்களைத் தாக்கும் பல்வேறு விதமான நோய்கள் இந்தத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது.  எனவே நோய் சார்ந்த தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, நோய் தாக்குலை அடையாளம் காண்பதும், ஆரம்ப காலத்திலேயே அவற்றை குணப்படுத்துவதும் அத்தியாவசியமாகிறது.   

இதனைக் கருத்தில்கொண்டு விவசாயிகள் அடிப்படையாகக் கொண்ட மீன்களுக்கான நோய் அறிக்கை அமைப்பை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் நோய் அறிக்கையை மேம்படுத்துவதற்காகவும் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மீன்நோயைக் கண்டறிவதற்கும் அவற்றை வகைப்படுத்துவதற்குமான செயலியை 2023 ஜூன் 28-ம் தேதி அறிமுகம் செய்கிறார். கிரிஷி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த செயலி, மீன்களுக்கு ஏற்படும் நோயிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான அறிவியல் ஆலோசனைகளை  விவசாயிகளுக்கு வழங்கி உதவும்.  மீன்களுக்கு ஏற்படும் நோய்களை அடையாளம் காணுதல், நோய்களினால் ஏற்படும் இழப்பைக் குறைத்து வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றிற்கும் இந்த செயலி பேரூதவியாக இருக்கும்.

***

AP/ES/RJ/KRS


(Release ID: 1935702) Visitor Counter : 160


Read this release in: English , Urdu , Hindi , Telugu