சுரங்கங்கள் அமைச்சகம்
இந்தியாவுக்கான அவசியமான கனிமங்கள் பட்டியலை சுரங்க அமைச்சகம் வெளியிடவுள்ளது
प्रविष्टि तिथि:
27 JUN 2023 3:07PM by PIB Chennai
இறக்குமதி தேவையை குறைத்தல், விநியோகத்தை அதிகரித்தல், நாட்டின் தேவையை பூர்த்தி செய்தல் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் முதன்முறையாக இந்தியாவுக்கான அவசியமான கனிமங்கள் பட்டியலை சுரங்க அமைச்சகம் வெளியிடவுள்ளது. இந்த அவசியமான கனிமங்கள் பட்டியலை புதுதில்லியில் 2023 ஜூன் 28 அன்று இந்திய சர்வதேச மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி பங்கேற்று வெளியிடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழில்துறை பிரதிநிதிகள், துறைசார்ந்த நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். அவசியமான கனிமங்கள் பட்டியலின் முக்கிய அம்சங்கள் குறித்து குறு ஆவணப்படம் திரையிடப்படும். சில அவசியமான கனிமங்கள் இந்நிகழ்ச்சியில் காட்டப்படும்.
அவசியமான கனிமங்கள் பட்டியல் வெளியிடப்படுவது இந்தியாவின் தற்சார்பு மற்றும் கனிம வளங்களின் கட்டமைப்பில் பாதுகாப்பில் ஒரு மைல்கல்லாகும். இப்பட்டியல் மூலம் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய பல்வேறு தொழில்துறை துறைகளுக்கு அவசியமான கனிமங்களைக் கண்டறிந்து முன்னுரிமை அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
***
AP/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 1935638)
आगंतुक पटल : 215