நித்தி ஆயோக்

இளையோர் பங்கேற்கும் தேசிய ஆய்வக புதுமைக் கண்டுபிடிப்புகள் உரையாடல் 2022-ல் 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 புத்தொழில் நிறுவனங்கள் வெற்றி பெற்றன

Posted On: 27 JUN 2023 2:06PM by PIB Chennai

வெற்றிபெற்ற 12 புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக 5000 டாலர் நிதியைப் பெற்றது.

வேளாண்மை, கல்வி தொழில்நுட்பம், மகளிர் வாழ்வாதாரம், சுழற்சிப் பொருளாதாரம், உயிரி பன்முகத்தன்மை ஆகிய துறைகளில் ஆய்வு செய்து வரும் 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 புத்தொழில் நிறுவனங்கள் ஐந்தாவது இளையோர் பங்கேற்கும் இந்திய தேசிய ஆய்வகப் புதுமைக் கண்டுபிடிப்புகள் உரையாடலில் 2022-ல்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், முதலீடு செய்தல் ஆகியவற்றுக்காக பொதுவான திட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில்  ஐநா வளர்ச்சித் திட்டம், சிட்டி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 2017-ம் ஆண்டு இளையோர் பங்கேற்கும் ஆய்வகத்தை தொடங்கியது. அதன் மூலம் அவர்கள் தலைமைத்துவம், சமூகப் புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு மூலமாக நீடித்த வளர்ச்சி நோக்கங்களை அமல்படுத்த முடியும்.

2019-ம் ஆண்டு நித்தி ஆயோக்கின் அடல் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத்துடன் இணைந்து இந்தியாவில் இளையோருக்கான ஆய்வகம் தொடங்கப்பட்டது. 2022-23-ம் ஆண்டிற்கான போட்டிக்கு நாடு முழுவதும் 28 மாநிலங்களில் இருந்து 378 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

புனேயைச் சேர்ந்த  ஆகாஸ் தீப் பன்சல், ஜெய்பூரைச் சேர்ந்த சக்ஷம் குப்தா, மும்பையைச் சேர்ந்த சௌமியா தப்ரிவால், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அக்சய் தீபக் கவாலே, அருணாச்சலப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திமும்பர்டின், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமன் குமார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தேபப்ரதா தாஸ், மும்பையைச் சேர்ந்த ரஜத் சோஹன் விஸ்வகர்மா, குருகிராமைச் சேர்ந்த ரிஷப் பட்டேல், புதுதில்லியைச் சேர்ந்த சுக்லா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சந்தீப் குமார், பெங்களூரைச் சேர்ந்த சங்கர் ஸ்ரீ ஆகியோர் விருது பெற்றனர்.

 ***

(Release ID: 1935578)

AP/IR/AG/KRS

 



(Release ID: 1935616) Visitor Counter : 119