எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக, கிரிட்கோ ஒடிசாவுடன் என்எச்பிசி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

प्रविष्टि तिथि: 24 JUN 2023 6:05PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி மேம்பாட்டு அமைப்பான தேசிய புனல் மின்சக்தி கழகம் என்எச்பிசி  , ஒடிசா அரசாங்கத்தின் கிரிட்கோ ஒடிஷாவுடன், ஒடிசா மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறைந்தபட்சம் 2,000 மெகாவாட் திறன் கொண்ட பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்களையும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களையும் (தரையில்  அமைக்கப்படும் சூரிய மின்சக்தி திட்டங்கள் / மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டங்கள்) அமைக்க திட்டமிடுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்  ஜூன்23 அன்று, என்எச்பிசி நிர்வாக இயக்குனர் திரு ரஜத் குப்தா மற்றும் கிரிட்கோ நிர்வாக இயக்குனர் திரு திரிலோச்சன் பாண்டா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

***

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1935055) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Odia , English , Urdu , हिन्दी , Telugu