பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத் துறை செயலாளர் ஆய்வு
Posted On:
23 JUN 2023 3:15PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத் துறை செயலாளர் திரு. வி.சீனிவாஸ் இன்று ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைந்த குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு முறை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
ஜம்மு-காஷ்மீர் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு முறை இணையதளம் செயல்படுவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.
***
AP/PKV/RR/KRS
(Release ID: 1934814)