பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
உலக அரிவாள் செல் தினத்தையொட்டி அரிவாள் செல் நோய்க் குறித்த பயிலரங்கிற்கு காணொலிக் காட்சி வாயிலாக மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
19 JUN 2023 6:18PM by PIB Chennai
உலக அரிவாள் செல் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, புதுதில்லியில் தேசிய பழங்குடியின ஆராய்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அரிவாள் செல் நோய் குறித்த பயிலரங்கிற்கு காணொலிக் காட்சி வாயிலாக மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தலைமை வகித்தார்.
அரிவாள் செல் நோய் என்பது மரபு ரீதியாக இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள் 86 பேரில் ஒருவருக்கு பரவுகிறது. ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபினை இந்நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இந்நோயை முன்னரே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பதன் விளைவாக நோயாளியின் உயிரைக் காக்க முடியும். இந்நோயை முற்றிலுமாக களைவது நாட்டின் பொது சுகாதாரத் தன்மைக்கு உகந்ததாக அமையும்.
-----
SM/IR/KPG/KRS
(Release ID: 1933456)
(रिलीज़ आईडी: 1933489)
आगंतुक पटल : 210