பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுக் காலத்தில், 6 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளித்த நிலையில், 2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகால ஆட்சியில், மோடி அரசு 9 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்

Posted On: 19 JUN 2023 5:34PM by PIB Chennai

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுக் காலத்தில் 6 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் அளித்த நிலையில் 2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு 9 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மோடி அரசின் 9 ஆண்டுக் காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிய 6 வேலைவாய்ப்பு முகாம்கள்  மூலம் ஒவ்வொரு முகாமின் போதும் 70,000-க்கும் மேற்பட்ட பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் 6,02,045 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டு காலத்தில் 8,82,191 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை மத்திய குடிமைப் பணித் தேர்வாணையம் 45,431 பேரை தேர்வு செய்திருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 50,906 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2,07,563 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு 4,00,691 பேரை தேர்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ரயில்வே தேர்வு வாரியம் 3,47,251 பேரை தேர்வு செய்த நிலையில், தற்போதைய அரசு 4,30,592 இளையோருக்கு அரசு  வேலைவாய்ப்புகளை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

----- 

SM/IR/KPG/KRS


(Release ID: 1933485) Visitor Counter : 257
Read this release in: Urdu , Hindi , Punjabi , Odia , Telugu