எரிசக்தி அமைச்சகம்
மியான்மரின் மின்துறை வல்லுநர்களுக்கான இந்தியாவின் ஐந்தாவது பயிற்சித் திட்டம் தொடங்கியது
Posted On:
19 JUN 2023 4:48PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி, மியான்மரைச் சேர்ந்த மின்துறை வல்லுநர்களுக்கு ஐந்து பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மின்துறையில் ஒத்துழைப்பிற்காக இந்தியா-மியான்மர் அரசாங்கத்தின் கீழ் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி) திட்டம், இந்திய அரசின் வெளி விவகார அமைச்சகத்தின் முன்னணி திறன் வளர்ப்பு தளமாகும்.
ஐந்து நிகழ்ச்சிகளில், நான்கு நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கும் மியான்மரின் மின்துறை வல்லுநர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நான்கு நிகழ்ச்சிகளும் ஸ்மார்ட் தொகுப்பில் உள்ளன; எல்லை தாண்டிய எரிசக்தி வர்த்தகம்; மின்சார வாகனங்கள், பேட்டரிகள், சார்ஜிங் நிலையங்கள், மைக்ரோ தொகுப்பு ஆகியவற்றில் முதல் இரண்டு நிகழ்ச்சிகளும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டன. பிந்தைய இரண்டு நிகழ்ச்சிகள் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகின்றன.
இந்த ஐந்து நிகழ்ச்சிகளில் கடைசி நிகழ்ச்சியான, "சூரிய ஆற்றல் மற்றும் ஒளிமின்னழுத்த (பி.வி) அமைப்பு" இன்று, புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது. ஜூன் 23, அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்ப கூறுகள், பொருளாதாரம், செலவு-நன்மை பகுப்பாய்வு, கொள்கை கட்டமைப்புகள், திட்ட வடிவமைப்பு, செயல்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் உள்ளிட்ட சூரிய சக்தி பி.வி திட்டங்கள் குறித்த விரிவான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க விழாவில் மியான்மருக்கான இந்திய தூதர் திரு.வினய் குமார் கலந்து கொண்டார். என்.டி.பி.சி நிறுவனத்தின் நிதி இயக்குநர் ஜெ. சீனிவாசன், வெளிவிவகார அமைச்சகத்தின் அபிவிருத்தி கூட்டாண்மை நிர்வாகத்தின் இயக்குநர் ஏ. பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐ.டி.இ.சி திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மின் துறையில் அறிவு பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளும் உறுதிப்பூண்டுள்ளன.
***
(Release ID: 1933418)
(Release ID: 1933452)
Visitor Counter : 135