பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘இளைய பணியாளர்களுக்கான திறன் பயிற்சி’ தற்போது ஐகாட் கர்மயோகி தளத்தில் நேரடியாக அளிக்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 19 JUN 2023 11:30AM by PIB Chennai

‘இளைய பணியாளர்களுக்கான நடத்தை, அறிவு மேம்பாடு, நிர்வாகத்தில் ஒட்டுமொத்த மாற்றத்திற்கான திறன் என்பதைக் குறிக்கும் தக்ஷ்தா பயிற்சி’  தற்போது ஐகாட் கர்மயோகி தளத்தில் நேரடியாக அளிக்கப்படுகிறது. அரசுப் பணியில் புதிதாக சேர்ந்துள்ள இளைய பணியாளர்களுக்கு 18 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான கடமைகள், பொறுப்புகள் குறித்து  எடுத்துரைக்கப்படுகிறது.

தற்போது ஐகாட் கர்மயோகி இணையதளத்தில் நித்தி ஆயோக்கின் 40 இளைய பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அரசுக்கான தரவு சார்ந்த தீர்மானம் முடிவு, அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை நெறிமுறை, அலுவலக நடைமுறை, பணியிடத்தில் யோகா இடைவேளை, திறன்மிக்க தகவல் தொடர்பு, பொதுக்கொள்கை ஆராய்ச்சிக்கான அடிப்படைகள், மேம்படுத்தப்பட்ட விளக்கக் காட்சி (மைக்ரோ சாஃப்ட்) உள்ளிட்ட 18 தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது

https://igotkarmayogi.gov.in  என்ற இணையதளம் மூலம் அரசு ஊழியர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக உதவும் விரிவான தளமாகும்.

***

SM/IR/KPG/KRS


(रिलीज़ आईडी: 1933375) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , हिन्दी , Bengali , Urdu , Gujarati , Telugu