எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜோத்பூர் ஐஐடி-யின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை ஈடு செய்ய மேற்கூரையில் ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை தேசிய அனல் மின் கழகம் நிறுவியுள்ளது

Posted On: 16 JUN 2023 1:28PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடி-யின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை ஈடு செய்ய  தேசிய அனல் மின் கழகத்தின்  துணை நிறுவனமான  வித்யுத் வியாப்பர் நிறுவனம் மேற்கூரையில் ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவியுள்ளது.  மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்படும்.

ஜோத்பூர் ஐஐடி வளாகத்தில் உள்ள 14 கட்டிடங்களின் மேற்கூரைகளில் இந்த சூரிய மின்சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 14.9லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது ஜோத்பூர் ஐஐடி-யின் 15 சதவீத மின்சாரத் தேவையை பூர்த்திச் செய்யும். இந்தத் திட்டத்தின் காரணமாக ஆண்டுக்கு 1060 டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறையும்.

***

AP/SMB/RS/KRS


(Release ID: 1932948) Visitor Counter : 154