நிலக்கரி அமைச்சகம்

ஜூன் 13 ஆம் தேதி நிலவரப்படி, 44.22% வளர்ச்சியுடன் ஒட்டு மொத்த நிலக்கரி இருப்பு 110.58 மில்லியன் டன்னை எட்டியது

Posted On: 15 JUN 2023 4:53PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா என்னும் தொலைநோக்குக்கு இணங்க, மத்திய நிலக்கரி அமைச்சகம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும். அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் நிலக்கரியை விநியோகம் செய்வதிலும் நிலக்கரி அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

2023 ஜூன் 13 தேதி நிலவரப்படி ஒட்டு மொத்த நிலக்கரி இருப்பு 110.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பான 76.67 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில், 44.22% என்னும் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதால் நிலக்கரி விநியோகத்தை தடையின்றி பராமரிக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதே போல 13.06.2023 நிலவரப்படி 2023-24 நிதியாண்டில், மின்சாரத் துறைக்கு நிலக்கரி அனுப்பும் விசயத்தில் 164.84 மில்லியன் டன் என்னும் ஒட்டு மொத்த அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.11% அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932613

****

 

AD/PKV/RR/GK



(Release ID: 1932659) Visitor Counter : 133