நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
திரு பிரகலாத் ஜோஷி தலைமையின் கீழ் நாடாளுமன்ற நல்லெண்ண தூதுக்குழுவினர் பிரேசில் செல்கின்றனர்
Posted On:
14 JUN 2023 5:39PM by PIB Chennai
இந்தியா-பிரேசில் இடையே தூதரக உறவு தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நடைபெறும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தலைமையிலான 10 பேர் கொண்ட நல்லெண்ணத் தூதுக்குழுவினர், 2023, ஜூன் 11 முதல் 13 வரை பிரேசிலில் பயணம் செய்தனர்.
இது குறித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகச் செயலாளர் திரு ஜி சீனிவாஸ் முதன் முறையாக நாடாளுமன்ற நல்லெண்ணத் தூதுக்குழுவினர் பிரேசில் சென்றதாகக் குறிப்பிட்டார். கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து பிரேசிலுடன் சிறந்த நட்புறவை பராமரிப்பதன் உயர் முக்கியத்துவத்தை இந்தப்பயணம் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கூறினார்.
ஜூன் 13 அன்று அக்குழுவினர், பிரேசில் நாடாளுமன்றத் தலைவர் திரு ரோட்ரிகோ ஒட்டாவியோ சோர்ஸ் பேச்சிக்கோவை சந்தித்துப் பேசினார்கள். இந்தியா-பிரேசில் இடையே நட்புறவை மேலும் அதிகரிப்பது குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்தியாவுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் வருகைத் தருமாறு மத்திய அமைச்சர் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932354
***
AD/IR/RS/GK
(Release ID: 1932422)