வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொடர்ந்து இறங்கு முகத்தில் மொத்த விலை குறியீடு; 2023 மே மாதத்தில் -3.48% ஆக வீழ்ச்சி
प्रविष्टि तिथि:
14 JUN 2023 12:00PM by PIB Chennai
அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்கம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 மே மாதத்தில் -3.48% (தற்காலிகமானது) ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் இது -0.92% ஆக இருந்தது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு உற்பத்திப் பொருட்கள், ஜவுளி, உணவு அல்லாத பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி பணவீக்க விகிதம் சரிந்ததற்கு காரணமாகும். இந்தப் பணவீக்க விகிதம் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2023 ஏப்ரல் மாதத்தை விட, மே மாதத்தில் மொத்த விலை குறியீடு -0.86% ஆக குறைந்தது.
2023 ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 14-07.2023 அன்று வெளியிடப்படும்.
குறிப்பு: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்களை மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 14-ந் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) வெளியிட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932217
***
AD/PKV/RR/GK
(रिलीज़ आईडी: 1932316)
आगंतुक पटल : 248