சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜி20 உயர்நிலை தணிக்கை நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் உயர்நிலை தணிக்கை அமைப்பு எஸ்ஏஐ20 உச்சி மாநாடு கோவாவில் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
13 JUN 2023 5:56PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் உயர்நிலை தணிக்கை அமைப்பு எஸ்ஏஐ20 உச்சி மாநாடு கோவாவில் இன்று நிறைவடைந்தது. இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) மற்றும் எஸ்ஏஐ20 குழுவின் தலைவரான திரு கிரிஷ் சந்திர முர்மு நிறைவுரை ஆற்றினார்.
திரு கிரிஷ் சந்திர முர்மு தனது உரையில், எஸ்ஏஐ20 இன் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்பு மற்றும் மிக முக்கியமாக, அனைத்து பரவலான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை உணர்வுக்காக நன்றி தெரிவித்தார்.
எஸ்ஏஐ20 உச்சி மாநாடு இன்று அறிக்கையின் இறுதி வரைவை ஆலோசித்து ஏற்றுக்கொண்டது. நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களில் தங்களுடைய மதிநுட்பத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட இந்தத் துறையில் உள்ள பிரபலங்களால் நீலப் பொருளாதாரம் பற்றிய நுண்ணறிவு வழங்கப்பட்டது.
நிறைவு அமர்வுக்குப் பிறகு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் திரு முர்மு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார், இங்கு நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்திற்குப் பிறகு, எஸ்ஏஐ20 ஜி20 நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைக்க உறுதி அளித்தன. சிறந்த நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் பொருத்தமான தணிக்கை வழிகாட்டுதல்களின் மேம்பாடு உள்ளிட்டவை உச்சிமாநாட்டின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையிலும் பிரதிபலித்தது.
இந்த உச்சி மாநாட்டின் இரண்டு நாள் கூட்டத்தில், ஆஸ்திரேலியா, பிரேசில், கொரியா, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் துருக்கியே, பங்களாதேஷ், எகிப்து, மொரிஷியஸ், நைஜீரியா, ஓமன், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, போலந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், யுஎஸ்ஏஐடி, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
***
AD/PKV/GK
(रिलीज़ आईडी: 1932103)
आगंतुक पटल : 230