கூட்டுறவு அமைச்சகம்

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த நான்கு முக்கிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted On: 09 JUN 2023 5:40PM by PIB Chennai

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த நான்கு முக்கிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் மேற்கொண்ட விரிவான ஆலோசனைகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.

  1. வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முந்தைய நிதியாண்டின் எண்ணிக்கையிலிருந்து 10 சதவீதம் வரை கூடுதலாக கிளைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  2. வணிக வங்கிகளுக்கு இணையாக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் கடன் தொடர்பான தீர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
  3. முன்னுரிமைத்துறை கடன் இலக்குகளை அடைவதற்கான காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  4. கூட்டுறவுத் துறையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புக்காக ரிசர்வ் வங்கி சார்பில் சிறப்பு அதிகாரியை நியமிக்கும் அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த முன்முயற்சிகள் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தும்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி பொருளாதார நிறுவனங்களுக்கு இணையாக அவற்றை மேம்படுத்த உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931050

***

AP/PLM/KPG/GK



(Release ID: 1931111) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Manipuri