கலாசாரத்துறை அமைச்சகம்

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தையொட்டி புதுதில்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் "நமது மொழி, நமது பாரம்பரியம்" என்ற கண்காட்சியை மத்திய இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கிவைத்தார்

Posted On: 09 JUN 2023 5:28PM by PIB Chennai

75-வது சர்வதேச ஆவணக் காப்பக தினத்தை இந்திய தேசிய ஆவணக் காப்பகம் இன்று (09.06.2023) கொண்டாடியது. இதையொட்டி சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  "நமது மொழி, நமது பாரம்பரியம்" என்ற தலைப்பிலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் தத்துவார்த்த முறைகள், ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவற்றின் தொன்மையான மூலப்படைப்புகள் ஆவணக் காப்பக களஞ்சியத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபல ஆளுமைகளின் தனிப்பட்ட கையெழுத்து பிரதிகளும், இந்திய தேசிய  அருங்காட்சியகத்தின் நூலக சேகரிப்பிலிருந்து அரிய நூல்களும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளனஇந்தக் கண்காட்சியில் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திருமதி மீனாட்சி லேகி, 5 மற்றும் 6-ம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை இந்தக் கண்காட்சியையொட்டி தேசிய ஆவணக் காப்பகங்கள் வழங்கியுள்ளதாகவும் அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்மேலும் அவர் கூறுகையில், தேசிய ஆவணக் காப்பக வளாகத்தில் சுமார் 72,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இடம்பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்இதற்காக தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். இவற்றை டிஜிட்டல் மயமாக்குவதால் இவை உலகம் முழுவதும் சென்றடையும் என்றும் அதனால் இளைய தலைமுறையினர் இவை குறித்து எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் திருமதி மீனாட்சி லேசி கூறினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931043

----

AP/PLM/GK



(Release ID: 1931110) Visitor Counter : 170