பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஃபரிதாபாத் விமானப்படைத் தளத்தின் தளபதி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 09 JUN 2023 3:34PM by PIB Chennai

ஃபரிதாபாத் விமானப்படைத் தளத்தின் குரூப் கேப்டன் கே.எஸ்.கணேஷிடமிருந்து தளபதி பொறுப்பை குரூப் கேப்டன் கபில் ஷர்மா ஏற்றுக் கொண்டுள்ளார்.

குரூப் கேப்டன் கபில் ஷர்மா 1997 டிசம்பரில் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பணிக்காலத்தில் செயல்பாட்டுத் தளங்கள், பழுது பார்ப்புப் பணிமனைகள் உட்பட பல்வேறு பணிகளில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். செகந்திராபாதில் உள்ள பாதுகாப்பு நிர்வாகக் கல்லூரியில் உயர்நிலைப் பாதுகாப்பு நிர்வாகப் படிப்பில் சேர்ந்து இவர் பயின்றுள்ளார்.

ஃபரிதாபாத் விமானப்படை தளம் மேற்கத்திய விமானப்படை பிரிவில் மிக முக்கியமான மையமாகும். இது இந்திய விமானப்படையின் பல்வேறு பிரிவுகளுக்கு மதிப்புமிகு ராணுவ உத்திகளில் உதவியாக செயல்படுகிறது.

***

AP/SMB/RR/GK


(रिलीज़ आईडी: 1931060) आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi