கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டு வரும் வகையில் 'சாகர் சம்ரித்தி' திட்டத்தை அறிமுகப்படுத்திய சர்பானந்த சோனோவால்

Posted On: 09 JUN 2023 3:54PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்துறை திரு.சர்பானந்த சோனோவால் குப்பைகளை செல்வமாக்கும் முயற்சியை இணைய வழியில் கண்காணிக்கும் சாகர் சம்ரித்தி முறையை தொடங்கி வைத்தார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை செயலாளர் சுதன்ஷ் பந்த் மற்றும் அமைச்சகத்தின் மற்ற மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா பார்வையை வலுப்படுத்துகிறது.

நிகழ்ச்சியில் பேசிய திரு.சோனோவால், “இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில், கண்காணிப்புக்கு கணினியை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம். இதனால் மனித தவறுகளைக் குறைக்க முடியும். இனிமேல், பெரிய துறைமுகங்கள் இணையக் கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உதவுவதோடு மற்றும் துறைமுகங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும். மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டுவரும்.

முக்கியத் துறைமுகங்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி பராமரிப்புக்காக செலவிடப்படுகிறது. இப்போது சாகர் சம்ரித்தி இணைய வழி கண்காணிப்பு முறையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மை ஏற்படுவதோடு செலவும் வெகுவாகக் குறையும்.

தற்போது கொச்சி துறைமுகமும், மும்பை துறைமுகமும் ஏற்கனவே இம்முறையை ஏற்றுக்கொண்டுள்ளன. புதிய மங்களூர் துறைமுகம் மற்றும் தீன்தயாள் துறைமுகத்தில் இம்முறை சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. தற்போது இம்முறை அனைத்து துறைமுகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931011

***



(Release ID: 1931056) Visitor Counter : 164