பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – பிரான்ஸ் –ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முதலாவது கடல் சார் ஒத்துழைப்பு பயிற்சி
Posted On:
08 JUN 2023 5:32PM by PIB Chennai
இந்தியா – பிரான்ஸ் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முதலாவது கடல் சார் ஒத்துழைப்பு பயிற்சி 2023 ஜூன் 7 அன்று ஓமன் வளைகுடாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் ஐஎன்எஸ் தற்காஷ், பிரான்ஸ் நாட்டின் சர்காஃப் கப்பல், ரஃபேல் போர் விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கப்பற் படையின் ரோந்து போர் விமானம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முதலாவது கூட்டுப்பயிற்சி மூன்று நாடுகளின் கப்பற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டது. கடற்பகுதியில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுக்கும். கடல்சார்ந்த வணிகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை இது அதிகரிப்பதோடு, இந்தப் பிராந்தியத்தின் கடற்பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும் பயன்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930811
***
AP/SMB/RS/GK
(Release ID: 1930842)
Visitor Counter : 163