அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

டாக்டர். ஜிதேந்திர சிங் ஜம்முவில் சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்

Posted On: 08 JUN 2023 4:06PM by PIB Chennai

ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் மேற்கொண்டு வரும் 'போதைப்பொருள் ஆராய்ச்சி திட்டம்' இந்தியாவிலேயே முதன்முறையாக நரம்பியல், புற்றுநோய் மற்றும் கால்-கை வலிப்பு போன்ற நோய்களுக்கு ஏற்றுமதி தரத்திற்கு மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், பணியாளர் நலன், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பின் போது, சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் மற்றும் இண்டஸ் ஸ்கேன் நிறுவனம் இடையே அறிவியல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போன்ற திட்டம் ஜம்மு காஷ்மீரில் பெரும் முதலீட்டிற்கு உத்வேகத்தை கொடுக்கும் என்று டாக்டர் சிங் கூறினார்.

1960-களில் புதினாவைக் கண்டுபிடித்த வரலாற்றைக் கொண்ட இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் ஊதா புரட்சியின் மையமாக செயல்பட்டதென டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இதுபோன்ற முக்கியமான திட்டங்களுக்கு, சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம், ஐஐஎம், ஐஐடி, எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம் :  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930768

*********



(Release ID: 1930837) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Marathi , Hindi