சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் மாசை ஆய்வு செய்ய காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் முடிவு
प्रविष्टि तिथि:
08 JUN 2023 10:23AM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை, சிறப்பாகத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகப் பகுதிகள் உட்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை 01.10.2023 முதல் கடுமையாக பின்பற்றப்படும். இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை சம்பந்தப்பட்ட அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டுமென்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
***
AP/PKV/RR/RK
(रिलीज़ आईडी: 1930723)
आगंतुक पटल : 238