பாதுகாப்பு அமைச்சகம்
ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் ஐஐடி டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொண்டார்
Posted On:
06 JUN 2023 7:00PM by PIB Chennai
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து, ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், 2023 ஜூன் 06-ம் தேதியன்று தில்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பூங்காவில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் கண்காட்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி, ஸ்மார்ட் ட்ரோன்கள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய ஸ்டார்ட்-அப்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி குறித்து ஜெர்மனி அமைச்சருக்கு விளக்கப்பட்டது.
மேலும், இந்திய மற்றும் ஜெர்மனி ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்கள் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியமான பகுதிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது.
***
AD/CR/KPG
(Release ID: 1930314)
Visitor Counter : 154