தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி தேர்தல் அதிகாரிகள் சுயமாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை ஐஐஐடிஇஎம் வடிவமைக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

Posted On: 06 JUN 2023 5:30PM by PIB Chennai

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் திரு.அனுப் சந்திர பாண்டே, திரு.அருண் கோயல் ஆகியோர் துவாரகாவில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தின் தங்கும் விடுதியை இன்று திறந்து வைத்தனர். இந்த நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவாக 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.ராஜீவ் குமார், தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி முறைகளை செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி சுய-கற்றல் முறையில் வடிவமைக்க வேண்டுமென ஐஐஐடிஇஎம்-ஐ கேட்டுக் கொண்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, மற்ற ஜனநாயக நாடுகளிலும் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒத்துழைப்பை ஐஐஐடிஇஎம் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

புதிய விடுதி கட்டடம்

இன்று திறக்கப்பட்ட விடுதி கட்டிடத்தில் 84 அறைகள் உள்ளன. ஃப்ளை-ஆஷ் செங்கற்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி பெறுவோருக்கென பொழுதுபோக்கு அறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் உள்ளது.

ஐஐஐடிஇஎம்

இந்தியாவில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளையும் ஐஐஐடிஇஎம் ஏற்பாடு செய்கிறது. தற்போதுவரை 117 நாடுகளைச் சேர்ந்த 2,478 சர்வதேச பயனாளர்கள் இந்நிறுவனம் மூலம் பயனடைந்துள்ளனர்.

 

----

AD/CR/KPG

 

 

 


(Release ID: 1930303) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Telugu