சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சின்னார்-சீரடி பிரிவு நான்கு வழி பாதையாக மாற்றம்: மத்திய அமைச்சர் திரு நிதின் ‌கட்காரி

Posted On: 06 JUN 2023 12:24PM by PIB Chennai

பாரத்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் சின்னார் பைபாஸ் கட்டமைப்பு உள்பட தேசிய நெடுஞ்சாலை 160 இன் சின்னார்-சீரடி பிரிவு, நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரி கூறினார். சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு இந்த வழி பிரத்தியேகமானதாக இருக்கும் என்பதால், இந்த மாற்றமிகு திட்டம், குறிப்பிடத்தக்க சமூக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் அமைச்சர் குறிப்பிட்டார். இது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளின் வேகமான வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இத்திட்டம் வழிவகை செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் இரண்டு முக்கிய ஆலயங்கள் அமைந்துள்ள நகரங்களான சீரடி மற்றும் நாசிக்/ திரியம்பகேஸ்வர் இடையே உள்ள பயண தூரத்தை கணிசமாகக் குறைப்பது தான் இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கம் என்று திரு கட்காரி கூறினார். மேலும், நிலைத்தன்மையை நோக்கிய நமது உறுதிப்பாட்டிற்கு இணங்க போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கார்பன் தடத்தைக் குறைக்கவும், பல்வேறு நுட்பங்கள் இந்த திட்டத்தில் பின்பற்றப்படுகின்றன. 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல் வாய்ந்த தலைமையின் கீழ், பகுதியின் முழுமையான வளர்ச்சியோடு, மிகுந்த செயல்திறன்மிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதில் நாம் உறுதி பூண்டிருப்பதாக திரு கட்காரி தெரிவித்தார்.

----

AD/BR/KPG



(Release ID: 1930232) Visitor Counter : 116