நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக சுற்றுச்சூழல் தினம் 2023-ல் நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நிலக்கரி அமைச்சகம் நடத்தியது

प्रविष्टि तिथि: 05 JUN 2023 6:19PM by PIB Chennai

உலக சுற்றுச்சூழல் தினம் 2023-ல் நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை  நிலக்கரி அமைச்சகம் நடத்தியது. இதன் முன்னோட்டமாக  கடந்த இரண்டு வாரங்களில்  200க்கும் அதிகமான விழிப்புணர்வு இயக்கங்கள், நிகழ்ச்சிகளுக்கு இந்த அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

கழிவுப் பொருட்களை குறைப்பதற்கு நிராகரி, குறைத்திடு, மீண்டும் பயன்படுத்து, சரிசெய், மறுசுழற்சி செய், என்னும்  5 கோட்பாடுகளை வலியுறுத்துவதாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிலக்கரி கிடைக்கும் பகுதிகளில் உள்ள பல்வகைப்பட்ட மரங்கள் பற்றி அறிந்துகொள்ளும் விவாதங்கள் நடத்தப்பட்டன. இதுதவிர சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. கழிவுப் பொருட்களில் இருந்து நல்ல பொருள்களை உருவாக்குதல், வினாடி-வினா போட்டி, பேச்சுப் போட்டி, சைக்ளத்தான் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.

அலுவலகங்கள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  கழிவுப்பொருள்கள் சேகரிப்பு, நீர்நிலைகளை தூய்மை செய்தல், வீட்டில் உரம் தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கு நடத்துதல் போன்ற இதர விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிலக்கரி அமைச்சகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், ஊழியர்களும் லைஃப் இயக்கத்திற்கு அர்ப்பணிக்கும் உறுதிமொழியை ஏற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929996

***

AD/SMB/AG/GK


(रिलीज़ आईडी: 1930046) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu